ADDED : பிப் 27, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்த வரைவு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு வேண்டுகோள்படி, கோவையில் மீண்டும் நேற்று, நீதிமன்ற புறககணிப்பு செய்த வக்கீல்கள், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பால், வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. மார்ச் 1 வரை தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.