ADDED : ஜூலை 10, 2024 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், மறியல் போராட்டம் தபால் அலுவலகம் எதிரே நடந்தது.செயலாளர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். உதவி தலைவர் உதயகுமார், உதவி செயலாளர் செந்தில், பொருளாளர் ஆரோக்கியசேவியர் ராஜ், மூத்த வக்கீல் மீரான் மொய்தீன், வக்கீல்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய சட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்யவும், குளறுபடிகளை நீக்க மத்திய அரசு சட்ட வல்லுநர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.