/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெ.ஜெ.நகர் பகுதியில் தார்சாலை போடுங்க
/
ஜெ.ஜெ.நகர் பகுதியில் தார்சாலை போடுங்க
ADDED : பிப் 25, 2025 11:53 PM

மேட்டுப்பாளையம்; ஜல்லி கற்கள் பெயர்ந்து, தார் சாலைக்கான அடையாளம் இல்லாத, அப்துல் கலாம் - ஜெ.ஜெ.நகர் சாலைக்கு, தார் போட, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஜெ.ஜெ. நகர், காளனுார் ஆகிய பகுதிகளில், விவசாய பூமிகள் நிறைந்துள்ளன. இப்பகுதி மக்கள் காளனுார், அப்துல் கலாம் நகர் சாலை வழியாக, மேட்டுப்பாளையத்துக்கு செல்கின்றனர்.
இந்த சாலையில், எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, தார் சாலைக்கான அடையாளம் இல்லாத சாலையில், வாகனங்கள் ஓட்ட முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சில நேரங்களில் ஜல்லி கற்களில் வாகனங்கள் சறுக்கி, பொதுமக்கள் கீழே விழுவதும் உண்டு. எனவே அப்துல் கலாம் நகரில் இருந்து, ஜெ.ஜெ.நகர் வரை உள்ள சாலைக்கு, புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.