/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பு கேட்டு பொய் புகார் ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
/
பாதுகாப்பு கேட்டு பொய் புகார் ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
பாதுகாப்பு கேட்டு பொய் புகார் ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
பாதுகாப்பு கேட்டு பொய் புகார் ஹிந்து முன்னணி நிர்வாகி கைது
ADDED : மே 04, 2024 01:43 AM

கோவை:கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சூர்ய பிரசாத், 29. ஹிந்து முன்னணி செல்வபுரம் நகர தலைவர். இவர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார்; பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 30ம் தேதி இரவு, செல்வபுரத்தை சேர்ந்த அசாருதீன் என்பவர், தன்னை மொபைல் போனில் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சூர்யபிரசாத் புகார் அளித்தார்.
செல்வபுரம் போலீசார், அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அந்த மொபைல்போனில் புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதும் இல்லை. சந்தேகம் அடைந்த போலீசார், சூரிய பிரசாத்திடம் விசாரித்தனர்.
அப்போது, தனக்கு தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக, அசாருதீன் மீது பொய் புகார் அளித்ததாக சூர்யபிரசாத் கூறினார். இதை தொடர்ந்து, அசாருதீன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சூர்ய பிரசாத்தை கைது செய்தனர்.
சில மாதங்களுக்கு முன், கொலை முயற்சி வழக்கில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சூர்ய பிரசாத்தை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.