/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாயில் கசிவு; வீணாகும் குடிநீர்
/
குழாயில் கசிவு; வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 23, 2025 11:56 PM

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஏழூர் பிரிவு அருகே குழாயில் ஏற்பட்ட கசிவால், குடிநீர் வீணாகி ரோட்டில் வழிந்து ஓடுகிறது.
குறிச்சி --- குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய், கிணத்துக்கடவு வழியாக செல்கிறது. இந்த குழாயில் பல பகுதிகளில் அடிக்கடி கசிவு ஏற்பட்டு, குடிநீர் ரோட்டில் வழிந்து ஓடியபடி உள்ளது.
பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஏழூர் பிரிவு அருகே தனியார் பள்ளி எதிரில், திடீரென குழாயில் கசிவு ஏற்பட்டு அதிகளவு குடிநீர் ரோட்டின் ஓரத்தில் வழிந்தோடி, மழைநீர் வடிகால் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் வழிந்து ஓடியது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள், குழாயில் தண்ணீர் செல்வதை நிறுத்தி, சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.