/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் கசிவு; சேதம் அடைந்த ரோடு: மக்கள் பாதிப்பு
/
குடிநீர் குழாய் கசிவு; சேதம் அடைந்த ரோடு: மக்கள் பாதிப்பு
குடிநீர் குழாய் கசிவு; சேதம் அடைந்த ரோடு: மக்கள் பாதிப்பு
குடிநீர் குழாய் கசிவு; சேதம் அடைந்த ரோடு: மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 31, 2024 01:55 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோட்டில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, ரோட்டில் அதிக அளவு தண்ணீர் வழிந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு அம்பராம்பாளையம் - ஆழியார் கூட்டு குடிநீர் திட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே மேம்பால துாண்கள் அருகில், திடீரென ரோடு சேதம் அடைந்து குடிநீர் வெளியேற துவங்கியது.
இதனால் சார்பதிவாளர் அலுவலகம் முதல் அண்ணா நகர் வரை ஏகமாக ரோட்டில் குடிநீர் நீண்ட நேரமாக வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
நடைபாதையில் நடந்து சென்ற சிலர், ரோட்டை கடக்க முடியாமல் செய்வதறியாது திகைத்து நின்றனர். குழாய் உடைந்த இடத்தின் அருகே நின்றிருந்த சிலரை, பேரூராட்சி பணியாளர்கள் ரோட்டை கடக்க உதவி செய்தனர்.
நேற்றுமுன்தினம் கிணத்துகடவு சுற்று வட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அப்போது இந்த குழாய் வழியாக சென்ற குடிநீர், மின்தடை ஏற்பட்டவுடன், அதிக அழுத்தத்துடன் பின் நோக்கி வந்ததில், குழாயில் கசிவு ஏற்பட்டு ரோடு சேதம் அடைந்தது அதன் மேல் பகுதியில் குடிநீர் வழிந்தோடியது.
இதில், சில இடங்களில் ரோட்டின் உயரம் அதிகரித்தது. மேலும், பஸ் போன்ற பெரிய அளவிலான வாகனங்கள் சேதம் அடைந்த பகுதியை கடக்கும் போது, அழுத்தத்தில் ரோட்டின் ஓரத்தில் பல இடங்களில் அதிகமாக குடிநீர் வெளியேறியது.
இதனால் பள்ளி மாணவர்கள், மார்க்கெட் செல்லும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், பேங்க் செல்பவர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர்.
தண்ணீர் கசிவு குறைந்தவுடன், ரோட்டில் வழிந்தோடிய தண்ணீர் கால்வாயில் சென்றது. இதை தொடர்ந்து இந்த குழாயை சீரமைக்கும் பணி நடந்தது.