/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விரிவுரையாளர் பணியிடங்கள் காலி; மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
/
விரிவுரையாளர் பணியிடங்கள் காலி; மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
விரிவுரையாளர் பணியிடங்கள் காலி; மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
விரிவுரையாளர் பணியிடங்கள் காலி; மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
ADDED : செப் 15, 2024 11:58 PM
கோவை : கல்லுாரிகளில், 60க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலையில், கடந்த 2022ம் அக்., மாதம் முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
தவிர, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உட்பட 330 பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளன.
இதுதவிர, பல்கலை மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், 60 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது ஒருபுறம் இருக்க எதிர்வரும் பருவத் தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அப்படியே எழுதினாலும் அதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதும் இயலாத காரியமாகி உள்ளது.
பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,'மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படவில்லை. அந்த வகுப்புகளின் போது மாணவர்கள் வெளியில் சுற்றி வருகின்றனர்.
தற்போது நடவடிக்கைகளை துவங்கினாலும், பணியிடங்களை நிரப்ப ஒரு மாதம் பிடிக்கும். இந்நிலையில், நவ., மாதம் பருவத் தேர்வுகள் நடக்க உள்ளன. அதற்குள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை நிறைவு செய்வது என்பது இயலாத காரியம்.
மாணவர்களே தங்களது பாடங்களை படித்து எழுதும் போது, தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது கடினமே. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.காலிப்பணியிடங்களை நிரப்புவதில், பாரதியார் பல்கலை மற்றும் மாநில உயர்கல்வித்துறை தொடர்ந்து மவுனம் சாதித்து வருவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

