/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடன் கொடுத்தவர்கள் தாக்குதல்: அரசு பஸ் கண்டக்டர் பலி
/
கடன் கொடுத்தவர்கள் தாக்குதல்: அரசு பஸ் கண்டக்டர் பலி
கடன் கொடுத்தவர்கள் தாக்குதல்: அரசு பஸ் கண்டக்டர் பலி
கடன் கொடுத்தவர்கள் தாக்குதல்: அரசு பஸ் கண்டக்டர் பலி
ADDED : ஆக 19, 2024 01:16 AM

பாலக்காடு;பாலக்காடு அருகே, கடன் கொடுத்தவர்களின் தாக்குதலில் காயம் அடைந்த, அரசு பஸ் கண்டக்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன்குட்டி - -ருக்மணி தம்பதியரின் மகன் மனோஜ் 40. திருமணமாகாத இவருக்கு, அரசு பஸ் ஊழியரான தந்தை இறப்பை தொடர்ந்து, அரசு பஸ்சில் கண்டக்டர் ஆக பணியாற்றி வந்தார்.
தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, இவர் கொளவன்மொக்கு என்ற பகுதியில் உள்ள சிலரிடம் இருந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். கடனை திருப்பி செலுத்துவதில் இவருக்கு சில சிரமங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி இவரது வீட்டுக்கு சென்று அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி பணத்தை திருப்பி கேட்க வந்த அவர்கள், இவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மனோஜை, அப்பகுதி மக்கள் முதலில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மனோஜ், நேற்று பலியானார்.
உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், புதுநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

