/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'போதைப் பொருள் இல்லாத வளாகங்கள் உருவாக்குவோம்'
/
'போதைப் பொருள் இல்லாத வளாகங்கள் உருவாக்குவோம்'
ADDED : ஆக 03, 2024 10:00 PM
கோவை : நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், 'போதைப் பொருள் இல்லாத வளாகங்கள்' என்ற தலைப்பில், பாரதியார் பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடந்தது.
பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் அஜீத்குமார் லால் மோகன் பேசுகையில், “மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். மாணவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணர்வை வீடு, கிராமம், சமுதாயம் ,கல்லுாரி என அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''போதைப்பொருள் பயன்படுத்துவோரைக் கண்டறிந்து, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். பெற்றோர் இல்லாத குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் குழந்தைகள், பெற்றோர் இருந்தும் தனிமையில் உள்ள குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள் போன்றோர், போதைக்கு அடிமையாக அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களைக் கண்டறிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என்றார்.
நிகழ்ச்சியில், போதையில்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. பல்கலை பதிவாளர் (பொ) ரூபா குணசீலன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.