/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவர்களுக்கு அன்பையும், நன்றியையும் பகிர்வோம்!
/
மருத்துவர்களுக்கு அன்பையும், நன்றியையும் பகிர்வோம்!
மருத்துவர்களுக்கு அன்பையும், நன்றியையும் பகிர்வோம்!
மருத்துவர்களுக்கு அன்பையும், நன்றியையும் பகிர்வோம்!
ADDED : ஜூன் 30, 2024 11:00 PM
இந்தியாவில், 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை, 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை, ஒரே நேரத்தில் படித்தவர்.
விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்குவங்கத்தின் இரண்டாவது முதல்வராக, 14 ஆண்டுகள் பதவி வகித்தார்.
அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ராயின் பிறந்த நாளான ஜூலை, 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல உலகின் ஒவ்வொரு மருத்துவர்களின் கண்டு பிடிப்புகளை பார்ப்போம்:
*உலகில் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் டாக்டர் எட்வர்ட் ஜென்னர். பெர்க்கிலியில் பிறந்த இவர் 'நோய் எதிர்ப்பியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
*அதுபோல, உலகின் முதல் ஓபன் ஹார்ட் சர்ஜரியை செய்தவர் டாக்டர் டானியல் ஹாலி வில்லியம். இவர் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கன்.
*அலெக்சாண்டர் பிளமிங்கின் கண்டுபிடிப்பான பென்சிலின், உலகின் சிறந்த ஆண்டி பயடிக்காக கருதப்படுகிறது.
*ஒரு மனிதரின் ரத்தத்தை இன்னொருவருக்கு செலுத்தலாம் என கண்டுபிடித்தவர் டாக்டர் சார்லஸ் ரிச்சர்ட் ட்ரூ. இவரும் ஓர் ஆப்ரிக்க அமெரிக்கர்.
*டாக்டர் மைக்கேல் எலிஸ் டிபெகேதான் முதன் முறையாக பாதிக்கப்பட்ட இதயத்தில், செயற்கையாக பம்ப் செய்யும் வால்வைப் பொருத்தியவர்.
*ஹெலன் புரோக், கருவுற்ற பெண்களுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தான தாலிடோமைடை தடை செய்ய காரணமாக இருந்தவர். இவரது கண்டுபிடிப்புகள், கைனகாலஜிஸ்ட்டுகளுக்கு இன்றும் உதவக்கூடியதாக இருக்கின்றன.
*ஜேம்ஸ் யங் சிம்சனின் கண்டுபிடிப்பான குளோரோபார்ம், டி.ஜி.,மார்ட்டன் கண்டுபிடிப்பான அனஸ்தீஷியா போன்றவை, மனிதனை வலியிலிருந்து காப்பாற்றின.
இந்த கண்டு பிடிப்புகளுடன் மருத்துவர்கள் நின்று விடவிலலை. தற்போது சர்வசாதாரனமாக ரோபோ உதவியுடன் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு சென்று விட்டனர்.