/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை தமிழ் புத்தாண்டு உணவு சொல்கிறது
/
அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை தமிழ் புத்தாண்டு உணவு சொல்கிறது
அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை தமிழ் புத்தாண்டு உணவு சொல்கிறது
அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை தமிழ் புத்தாண்டு உணவு சொல்கிறது
ADDED : ஏப் 13, 2024 10:45 PM
சித்திரை புத்தாண்டு தினத்தில் இறைவனுக்கு படையலிட்டு உண்ணும் உணவில் அறுசுவைகளும் இடம்பெறுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு ஆகிய அனைத்து சுவைகளும் அடங்கிய உணவு சமைக்கப்படும்.
பொதுவாக நல்ல நாட்களில் கசப்பான உணவு சமைக்கப்படாத நிலையில், தமிழ் புத்தாண்டு அன்று மட்டும், கசப்புக்காக பாகற்காய், வேப்பம்பூ உள்ளிட்டவை அன்றைய உணவில் சேர்க்கப்படுகின்றன.
அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே, இவ்வாறு அறுசுவை உணவு புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.
வருடப் பிறப்பன்று, புதுப் பஞ்சாங்கத்தைப் பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப்படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு.
வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள். தினமும் படிக்க முடியாவிட்டாலும், வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.