ADDED : ஆக 01, 2024 01:43 AM
கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரியில், டிரீம் ஜோன் மற்றும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில், கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
கைத்தறி தினம், ஆக., 7ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நடக்கும் முதல்கட்ட போட்டி இதுவாகும்.
இளங்கலை, முதுகலை சார்ந்த, 75 மாணவர்கள் பங்கேற்று, பவானி ஜமுக்காளத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட ஆடைகள், டை அண்டு டை முறை உட்பட பழமையும், புதுமையும் கலந்து கைத்தறி உடைகளை அணிந்து, மாணவ மாணவியர் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்றனர்.அணிவகுப்புக்குப்பின், நேர்காணலில் கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
ஆடை வடிவமைப்பு, அணிவகுப்பு அணுகுமுறை, அறிவுத்திறன் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் அடுத்தகட்ட சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், கல்லுாரி இயக்குனர் அல்லிராணி, துறைத்தலைவர் பிஸ்வரஞ்சன் கோஷ், மேலாண்மை துறைத்தலைவர் டெங்கடலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.