/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலகலத்த கோடை கால பயிற்சி முகாம் மலர்ந்தது பெண்கள், குழந்தைகள் முகம்

ADDED : மே 28, 2024 01:10 AM

கோவை;விடுமுறை நாட்களை குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகள் பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்விக் குழுமம் சார்பில், 'கலையும் கைவண்ணமும்' என்ற கோடைகால பயிற்சி, அபார்ட்மென்டுகளில் நடந்து வருகிறது.
பத்தாவது நாளாக, இந்நிகழ்ச்சி கணபதியில் உள்ள ஜெம் நிர்மால்யம் ரெசிடென்ஸியில் நேற்று நடந்தது.
இதில், கேரள முரல் பெயின்டிங், ஆப்பிரிக்க ஓவியங்கள், அலங்கார ஆபரண தயாரிப்பு, ஆர்ட் அண்ட் கிராப்ட் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு ஆர்ட் ஒர்க், இல்லத்தரசிகளுக்குப் பிடித்த ஜூவல்லரி ஆர்ட்,முதியோருக்கு தஞ்சாவூர் பெயின்டிங் என ஒவ்வொருவரும், ஒவ்வொரு கலைகளைக் கற்றுத் தேர்ந்தனர். சிறுவர்களும், பெண்களும் ஜாலியாகவும், பயனுள்ளதாகவும் பொழுதைக் கழித்தனர்.
பெவிகிரில் நிறுவனத்தின் முன்னணி ஓவிய வல்லுநர்கள் மற்றும் சிறந்த ஆபரண தயாரிப்பாளர்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஜெம் நிர்மால்யம் அசோசியேஷன் பொருளாளர் பிரதீபா, செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.