/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.25 கோடி கடன் உதவி
ADDED : ஜூலை 10, 2024 11:27 PM
மேட்டுப்பாளையம்: காரமடையில் நடந்த கடன் வழங்கும் நிகழ்ச்சியில், 34 மகளிர் சுய உதவி குழுவினருக்கு, ஒரு கோடியே, 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.
காரமடையில் குட்செப்பர்டு தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தில் ஏராளமான மகளிர் குழுவினர், பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் சார்பில், 34 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி, குட்செப்பர்டு அரங்கில் நடந்தது. நிறுவனத்தின் பொது இயக்குனர் சிஸ்டர் அனிலா மேத்யூ தலைமை வகித்தார். தொண்டு நிறுவனத்தின் செயலாளர் சிஸ்டர் தீப்தி வரவேற்றார்.
ஆயர் ஜேக்கப் மனதோடத், இந்தியன் வங்கி காரமடை மேலாளர் லட்சுமி ஆகியோர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ஒரு கோடியே, 25 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்கி பேசினர்.