/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளைவில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிருடன் மீட்பு
/
வளைவில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிருடன் மீட்பு
ADDED : பிப் 26, 2025 11:41 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, லாரி கவிழ்ந்ததில், இடிபாடுகளில் சிக்கிய லாரி டிரைவரை, தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
பொள்ளாச்சி அருகே, பல்லடம் ரோட்டில் ராசக்காபாளையம் வளைவில், அவ்வப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு பிளாஸ்டிக் கழிவு ஏற்றி சென்ற லாரி, ராசக்காபாளையம் வளைவில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரோடு வளைவில் இருந்த கல்லுக்கும், லாரிக்கும் இடையே, மாயவரத்தை சேர்ந்த டிரைவர் மாயவேல்,34, என்பவர் சிக்கி கொண்டு தவித்தார்.
இது குறித்து, அவ்வழியாக சென்ற மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கிய டிரைவரை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

