/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழை வரத்து குறைவு; விலை உயர வாய்ப்பு
/
வாழை வரத்து குறைவு; விலை உயர வாய்ப்பு
ADDED : மே 30, 2024 11:42 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழை வரத்து குறைவாக இருந்ததால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், விவசாயிகள் விளை பொருட்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, இங்கு வாழை வரத்து குறைந்துள்ளது, என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாரம், செவ்வாழை கிலோ - 60, பூவன் - 30, நேந்திரன் - 45, கதளி - 50, சாம்பிராணி - 40, ரஸ்தாளி - 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த, 10 நாட்களுக்கு முன் இருந்த விலையை விட செவ்வாழை மற்றும் நேந்திரன் விலை கிலோவுக்கு, 5 ரூபாய் அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'வாழை வரத்து கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரு டன்னுக்கும் குறைவாகவே வாழை வரத்து இருந்தது. இன்னும் ஒரு சில தினங்களுக்கு வாழை வரத்து குறைவாகவும், விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது,' என்றனர்.