/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை குறுமைய டெனிகாய்ட்; திறமையை காட்டிய மாணவியர்
/
மதுக்கரை குறுமைய டெனிகாய்ட்; திறமையை காட்டிய மாணவியர்
மதுக்கரை குறுமைய டெனிகாய்ட்; திறமையை காட்டிய மாணவியர்
மதுக்கரை குறுமைய டெனிகாய்ட்; திறமையை காட்டிய மாணவியர்
ADDED : ஆக 06, 2024 11:14 PM

கோவை : மதுக்கரை குறுமைய அளவிலான டெனிகாய்ட் போட்டியில், மாணவியர் தங்கள் திறமையையும் வெளிப்படுத்தினர்.
பள்ளிக்கல்வித்துறையின் மதுக்கரை குறுமையத்துக்கு உட்பட்ட, பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி, செயின்ட் ஆன்ஸ் பள்ளி சார்பில் நடக்கிறது. இதன் டெனிகாய்ட் போட்டிகள் ஆன்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தது.
போட்டி முடிவுகள்
14 வயது ஒற்றையர் பிரிவில், குளோபல் பாத்வே பள்ளி முதலிடம், மரப்பாலம் அரசு பள்ளி இரண்டாமிடம்; இரட்டையர் பிரிவில் குளோபல் பாத்வே பள்ளி முதலிடம், மதுக்கரை அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.
17 வயது இரட்டையர் பிரிவில் குளோபல் பாத்வே முதுலிடம், குரும்பபாளையம் அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.
19 வயது பரிவில், ஒற்றையர் பிரிவில் மதுக்கரை அரசு பள்ளி முதலிடம், குளோபல் பாத்வே இரண்டாமிடம்; இரட்டையர் பிரிவில் மதுக்கரை அரசு பள்ளி முதலிடம், எல்ஜி இரண்டாமிடம் பிடித்தன.