/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை குறுமைய விளையாட்டு மல்லையன் பள்ளி அசத்தல்
/
மதுக்கரை குறுமைய விளையாட்டு மல்லையன் பள்ளி அசத்தல்
மதுக்கரை குறுமைய விளையாட்டு மல்லையன் பள்ளி அசத்தல்
மதுக்கரை குறுமைய விளையாட்டு மல்லையன் பள்ளி அசத்தல்
ADDED : ஆக 03, 2024 06:48 AM

கோவை: மதுக்கரை குறுமைய அளவிலான கூடைப்பந்து போட்டியில், மல்லையன் பள்ளி அணி அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது.
பள்ளிக்கல்வித்துறையின், மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை, செயின்ட் ஆன்ஸ் பள்ளி ஒருங்கிணைத்து நடத்துகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாணவ - மாணவியருக்கு கூடைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர் கூடைப்பந்து : 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில் மல்லையன் பள்ளி அணி 30 - 6 என்ற புள்ளிக்கணக்கில் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியையும்; 17 வயது பிரிவில் மல்லையன் பள்ளி அணி 26 - 14 என்ற புள்ளிக்கணக்கில் எல்ஜி பள்ளியையும்; 19 வயது பிரிவில், எல்ஜி பள்ளி அணி 39 - 0 என்ற புள்ளிக்கணக்கில், வெள்ளலுார் நிர்மலா மாதா பள்ளியையும் வீழ்த்தி முதலிடம் பிடித்தன.
மாணவியர் கூடைப்பந்து 17 வயது பிரிவில் மல்லையன் பள்ளி அணி 30 - 4 என்ற புள்ளிக்கணக்கில் செயின்ட் ஆன்ஸ் பள்ளியையும், 19 வயது பிரிவில் எல்ஜி பள்ளி அணி 12 - 4 என்ற புள்ளிக்கணக்கில் நிர்மலா மாதா பள்ளியையும் வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.
மாணவர்கள் கால்பந்து 14 வயது பிரிவில், ஜே.ஜே நகர் அரசு பள்ளி முதலிடம், பி.எம்.ஜி.,பள்ளி இரண்டாமிடம், 19 வயது பிரிவில் செயின்ட் ஆன்ஸ் பள்ளி முதலிடம், நிர்மலா மாதா பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.
நேற்று காலை நடந்த, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து முதல் சுற்றுப்போட்டியில், நிர்மலா மாதா பள்ளி அணி, 6 - 5 (டை பிரேக்கர்) என்ற கோல் கணக்கில் செயின்ட் ஆன்ஸ் பள்ளியை வீழ்த்தியது.