/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை குறுமையம்; மாணவியர் அசத்தல்
/
மதுக்கரை குறுமையம்; மாணவியர் அசத்தல்
ADDED : ஆக 20, 2024 11:58 PM

கோவை;மதுக்கரை குறுமையத்துக்கு உட்பட்ட, பள்ளி மாணவியருக்கான கோ கோ போட்டியில், பி.எம்.ஜி., மாணவியர் இரு பிரிவுகளில், முதல் இடம் பிடித்து அசத்தினர்.
பள்ளிக்கல்வித்துறையின் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், செயின்ட் ஆன்ஸ் பள்ளி சார்பில், நேரு தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கிறது. இதன் மாணவியர் பிரிவு கோ கோ போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.
இதன் 14 வயது பிரிவில், பி.எம்.ஜி., பள்ளி முதலிடமும், குளோபல் பாத்வே பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன.
17 வயது பிரிவில் பி.எம்.ஜி., பள்ளி முதலிடம், மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி அணி இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் எல்ஜி பள்ளி அணி முதலிடம், வெள்ளலுார் நிர்மல மாதா பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.