ADDED : பிப் 27, 2025 09:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பெரிய நெகமம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா கடந்த, 18ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த, 21ம் தேதி கோடந்துார் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிேஷகம் நடந்தது. கடந்த, 24ம் தேதி அம்மன் சக்தி அழைத்தல்; 25ம் தேதி சுவாமி அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜை, மாவிளக்கு பூஜையும், காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று மகா அன்னதானம், அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று இரவு, 8:00 மணிக்கு அபிேஷக ஆராதனை நடைபெறுகிறது.