/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் திருக்கல்யாண திருவிழா
/
மாகாளியம்மன் திருக்கல்யாண திருவிழா
ADDED : மே 01, 2024 11:09 PM

உடுமலை : லிங்கம்மாவூர் உச்சி மாகாளியம்மன் கோவில், திருவிழாவையொட்டி நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
உடுமலை அருகே கொங்கல்நகரம் ஊராட்சி, லிங்கம்மாவூரில் ஸ்ரீ விநாயகர், உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர்.
நேற்று முன்தினம் இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு உச்சிமாகாளியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர். மாலை, 4:00 மணிக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (2ம் தேதி) அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

