/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் வளர்ச்சிக்கு மெக்னீசியம் சத்து அவசியம்
/
பயிர் வளர்ச்சிக்கு மெக்னீசியம் சத்து அவசியம்
ADDED : செப் 02, 2024 01:30 AM
பெ.நா.பாளையம்:பயிர் வளர்ச்சிக்கு, குறிப்பாக, பயிரில் பச்சையம் பெருக மெக்னீசியம் சத்து அவசியம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.
தென்னை மரங்களை பராமரிப்பதில் ஊட்டச்சத்து மேலாண்மை அவசியம். தென்னை மரங்களின் நீடித்த வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்கு ஆதாரமாக திகழ்வது தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
தழைச்சத்து, இலைகளின் ஆரோக்கியம் மற்றும் தடிமன் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமன்றி இலைகள் நன்கு பச்சை நிறமாக காட்சியளித்தல், அதிகளவு பெண் பூக்களை உற்பத்தி செய்தல், சீரான வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.கால்சியம், தென்னை மரங்களின் தண்டு மற்றும் மட்டை பகுதிகளின் தடிமன் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மெக்னீசியம், ஒட்டுமொத்த பயிரின் பச்சயத்தை நிர்ணயிக்க கூடியது ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் பயிரின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் அமையும். மெக்னீசியம் பற்றாக்குறையினால் திடீரென இலைகள் முழுமையாக பழுப்பு நிறமாகி, ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். எனவே தென்னை உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சீரான சத்துக்கள் வழங்குவது அவசியம் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.