/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன்னிகுமாரசுவாமி கோவிலில் மகா கும்பாபிேஷக விழா
/
வன்னிகுமாரசுவாமி கோவிலில் மகா கும்பாபிேஷக விழா
ADDED : மார் 25, 2024 12:12 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, நெ.10.முத்துார் வன்னிகுமார சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு, நெ.10. முத்துார் வன்னிகுமார சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் கடந்த, 21ம் தேதி மங்கள இசை மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து, வேத பாராயணம், திருமுறை பாராயணம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வஜனம், கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவ கிரஹா ஹோமம், மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை, முதல் கால யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, வேதிகார்ச்சனை மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, ஆச்சார்ய வர்ணம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நேற்று காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் வன்னி குமார சுவாமி மூலாலய மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1,500வது கோவில்
ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில், தொன்மையான கோவில்களை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்தப்படும் வரிசையில், 1,500வது கோவிலாக வன்னிகுமாரசுவாமி கோவில் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதில், ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

