/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லிங்கம்மாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா
/
லிங்கம்மாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : மே 03, 2024 11:01 PM
அன்னுார்:மத்திரெட்டி பாளையத்தில் உள்ள பழமையான லிங்கம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதையடுத்து பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, ஏப். 29ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது.
கடந்த மே 1ம் தேதி காலை நவகிரஹ ஹோமம், சர்வ காயத்ரி ஹோமம் நடந்தது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. மே 2ம் தேதி காலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடந்தது.
நேற்று காலை வேள்வி சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள், கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்துக்கும் கொண்டு செல்லப்பட்டன. காலை 9:15 மணிக்கு லிங்கம்மாள், வரதராஜ பெருமாள், கருப்பராயர், கன்னிமார், பால விநாயகர், பால முருகர் ஆகிய தெய்வங்களுக்கும், விமானத்திற்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தச தரிசனம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.