/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூகாம்பிகைக்கு மகா கும்பாபிஷேகம்
/
மூகாம்பிகைக்கு மகா கும்பாபிஷேகம்
ADDED : ஆக 25, 2024 01:03 AM
கோவை;சரவணம்பட்டி, சங்கரா கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள, வித்யா மகா கணபதி, மூகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
வரும் 28ம் தேதி, காலை, 9:00 முதல் மாலை, 5:30 மணி வரை, சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களை தொடர்ந்து, முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது.
29ம் தேதி, காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை, 11:00 மணிக்கு, மூகாம்பிகை கோபுர விமான கலச ஸ்தாபனமும் நடக்கிறது.
மாலை, 5:30 மணி முதல், மூன்றாம் காலயாக சாலை பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. ஆக., 30ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, காலை, 8:15 மணிக்கு, மூகாம்பிகை கோபுர விமான கும்பாபிஷேகமும், காலை, 8:30 மணிக்கு, மூகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகள் மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடக்கிறது.
காலை, 9:00 மணி முதல், மூகாம்பிகை மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.