/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலபைரவர், நவகிரகங்களுக்கு நாளை மகா கும்பாபிஷேகம்
/
காலபைரவர், நவகிரகங்களுக்கு நாளை மகா கும்பாபிஷேகம்
ADDED : செப் 04, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்:நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், காலபைரவர் மற்றும் நவகிரக ஆலய கும்பாபிஷேகம் நாளை 5ம் தேதி நடக்கிறது.
நெகமத்தில் உள்ள நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள நித்தீஸ்வரர் ஆலயத்தின், பரிவார தெய்வங்களான காலபைரவர் மற்றும் நவகிரகங்கள் ஆலய கும்பாபிஷேக விழா, நாளை 5ம் தேதி நடக்கிறது.
காலை 7:45 மணியில் இருந்து, 8:45மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து நித்தீஸ்வரர், காலபைரவர் மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.