ADDED : மே 03, 2024 12:00 AM
கோவை:சிங்காநல்லுார் அக்ரஹாரம் இரட்டை வீதியிலுள்ள ஸ்ரீ மங்கள ஜோதிட நிலையத்தில், ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி உத்ஸவம் விமரிசையாக நடக்க உள்ளது.
வரும் 22ம் தேதி காலை 7:30 மணிக்கு அஷ்ட திரவ்ய சஹித சஹஸ்ர மோதஹ மஹா கணபதி ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனையும் தொடர்ந்து, ஸ்ரீ மஹா பெரியவருக்கு காய்கறி அலங்காரமும் செய்யப்படுகிறது.
மே 23 காலை 7:30 மணிக்கு சதருத்ராபிஷேகம், ருத்ரஹோமம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு வசோர்தாரை, தம்பதி பூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனையை தொடர்ந்து, கலாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, கனிகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.
மே 24 காலை 10:00 மணிக்கு அஷ்டோத்ர லட்சார்ச்சனையை தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நாராயணீயம் நடக்கிறது.
பகல் 12:30 மணிக்கு மஹாதீபாராதனை, பிரசாத வினியோகம், ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது.
பக்தர்கள் பங்கேற்று, ஆசிர்வாதங்களை பெறலாம் என, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.