/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
/
மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED : மே 02, 2024 11:02 PM
மேட்டுப்பாளையம்;சிறுமுகை சத்தி மெயின் சாலையில், சக்தி விநாயகர் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 24ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கியது.
29ம் தேதி பவானி ஆற்றில் ராமர் கோவில் படித்துறையில் இருந்து, தீர்த்தங்கள் எடுத்து வந்து, விநாயகர், அம்மன், பாலமுருகன் மற்றும் நவகிரகங்களுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. 30ம் தேதி காலை மகா கணபதி ஹோமமும், அதைத் தொடர்ந்து மாலையில் பவானி ஆற்றிலிருந்து வான வேடிக்கையுடன் மேளம் முழங்க, கோவிலுக்கு கம்பம் எடுத்து வரப்பட்டது.
இரவு பூச்சாட்டும், அதைத் தொடர்ந்து இரவு கம்பம் நடப்பட்டது. இம்மாதம் முதல் தேதியில் இருந்து, ஏழாம் தேதி வரை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும் நடைபெற உள்ளது.