/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிகள் எதிரொலி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
பராமரிப்பு பணிகள் எதிரொலி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் எதிரொலி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் எதிரொலி: ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : மார் 06, 2025 12:29 AM
கோவை:
பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி, பொன்மலை ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அப்பணிகளுக்காக, மயிலாடுதுறை - கோவை மற்றும் கோவை - மயிலாடுதுறை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை - மயிலாடுதுறை(12084) ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று, 8, 13, 15 ஆகிய தேதிகளில், திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் செல்லாது.
அதேபோல், மயிலாடுதுறை - கோவை(12083) ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று, 8, 13, 15 ஆகிய தேதிகளில், திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.