/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்! செல்வப்பெருந்தகை யோசனை
/
இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்! செல்வப்பெருந்தகை யோசனை
இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்! செல்வப்பெருந்தகை யோசனை
இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்! செல்வப்பெருந்தகை யோசனை
ADDED : மே 18, 2024 02:14 AM

கோவை;''முடிந்தால் பணியாற்றுங்கள்; இல்லையென்றால், இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்,'' என காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிர்வாகிகளிடம் பேசினார்.
கோவை மாநகர் மாவட்ட காங்., கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கணபதி சி.எம்., மஹாலில் நேற்று நடந்தது. காங்., மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
நாட்டு விடுதலைக்காக போராடிய காங்கிரஸ் கட்சிக்கு, இன்று பல்வேறு பகுதிகளில் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது. 'எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் எங்களுக்கு மதிப்பு இல்லை, அங்கீகாரம் இல்லை, எங்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை' என கட்சித்தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்த நம்மால் தமிழகத்துக்கு விடுதலை பெற்று தர முடியாதா? காங்., கட்சியை முதன்மை கட்சியாக மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலிலும் சீட்டுக்கான பிற கட்சி களிடம் கேட்கும் நிலை மாறி, சீட்டை பிரித்துக்கொடுக்கும் இடத்தில் நாம் தான் இருக்க வேண்டும்.
நிர்வாகிகள், தலைவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இல்லையென்றால் இயற்கை நம்மை ஒதுக்கி விடும். முடிந்தால் பணியாற்றுங்கள்; இல்லையென்றால், இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

