/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையாளி சமாஜம் ரூ.25 லட்சம் நிதியுதவி
/
மலையாளி சமாஜம் ரூ.25 லட்சம் நிதியுதவி
ADDED : செப் 02, 2024 01:27 AM

கோவை:கன மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வயநாட்டிற்கு, கோவை மலையாளி சமாஜம் மற்றும் சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை சார்பில், ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மலையாளி சமாஜம் தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ராஜகோபால், துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் அலுவலகத்துக்கு சென்று, முதல்வர் பினராயி விஜயனிடம், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
கமிட்டி உறுப்பினர்கள் அசோக், சந்தோஷ் நாயர் மற்றும் நிர்வாகி சந்தோஷ் கொடகாட்டே ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல், கேரள கிளப்பில் இருந்து ரூ.1 லட்சமும், ஐயப்பா கீ ஸ்டோர் சார்பில், ரூ.50,000ம் முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கப்பட்டது.