/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனக்கல்லுாரிக்கு வருகை புரிந்த மலேசியா நாட்டினர்
/
வனக்கல்லுாரிக்கு வருகை புரிந்த மலேசியா நாட்டினர்
ADDED : ஆக 22, 2024 02:17 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லுாரிக்கு மலேசியா நாட்டினர் வருகை புரிந்து, கல்லுாரியின் தொழில்நுட்பங்கள், மரம் வளர்ப்பு குறித்து பார்வையிட்டனர்.
மலேசியா நாட்டின் தடிமர வாரியத்தில் இருந்து பத்து பேர் கொண்ட குழுவினர், மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு நேற்று வருகை புரிந்தனர்.
இவர்களை, கல்லுாரி முதல்வர். பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் வரவேற்றனர். இக்குழுவினருக்கு, வனக்கல்லுாரியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் செயல்பாடுகள், மதிப்புகூட்டுத் தொழில்நுட்பங்கள் போன்ற செயல்பாடுகள் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், மலேசியா நாட்டில் மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தடிமரத்தேவைகள் அதிகமாக இருப்பதால், இக்கல்லுாரியின் மரவளர்ப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் மகசூல் தரும் மர இனங்களை அந்நாட்டில் அறிமுகப்படுத்தி, தடிமர உற்பத்தியை அதிகரிக்க, துணைவேந்தர் கீதாலட்சுமி அறிவுறுத்தலின் படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.