/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மகுடம்' சூடிய மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மண்டல அளவிலான 'டென்னிஸ்' போட்டியில் அபாரம்
/
'மகுடம்' சூடிய மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மண்டல அளவிலான 'டென்னிஸ்' போட்டியில் அபாரம்
'மகுடம்' சூடிய மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மண்டல அளவிலான 'டென்னிஸ்' போட்டியில் அபாரம்
'மகுடம்' சூடிய மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மண்டல அளவிலான 'டென்னிஸ்' போட்டியில் அபாரம்
ADDED : செப் 09, 2024 01:35 AM
கோவை:மண்டல அளவிலான டென்னிஸ் போட்டியில், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆறு பிரிவுகளில் வெற்றி பெற்று, பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி, ஒத்தக்கால்மண்டபம் இந்துஸ்தான் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
திருமலைபாளையம் செயின்ட் ஏன்ஸ் மெட்ரிக் பள்ளி சார்பில், 14, 17, 19 வயதுக்குட்பட்டமாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 14 வயதுக்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில், செட்டிபாளையம் குளோபல் பள்ளி மாணவர் அஜய் விகாஷ், வெள்ளலுார் நிர்மல மாதா பள்ளி மாணவர் காஜா முகமதுவை, 10-7 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரவீனா, செட்டிபாளையம் குளோபல் பள்ளி மாணவி ரிஷ்மாவை, 12-10 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிரவீனா, ரோஷினி ஆகியோர், செட்டிபாளையம் குளோபல் பள்ளியை சேர்ந்த ரிஷ்மா வர்ஷினி, நிரஞ்சனா ஆகியோரை, 10-5 என்ற புள்ளி கணக்கில் வென்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், செட்டிபாளையம் குளோபல் பள்ளி மாணவர் ரித்திக் தர்சன் மற்றும் அஜய் விகாஷ், வெள்ளலுார் நிர்மல மாதா பள்ளி மாணவர் தீனதயாளன் மற்றும் காஜா முகமது ஆகியோரை, 10-6 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.
17 வயதுக்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தரணிஷ், வெள்ளலுார் நிர்மல மாதா பள்ளி மாணவர் முகமது சையத்தை, 10-2 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.
இரட்டையர் பிரிவில், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தரணிஷ் மற்றும் பிரவீன், வெள்ளலுார் நிர்மல மாதா பள்ளிமாணவர்கள் முகமது சையத் மற்றும் முகமது முசாமில் ஆகியோரை, 10-2 என்ற புள்ளி கணக்கில் வென்றனர்.
தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர் அமர்நாத், வெள்ளலுார் நிர்மல மாதா பள்ளி மாணவர் சியாம் சரணை, 10-1 என்ற கணக்கில் வென்றார்.
இரட்டையர் பிரிவில், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அமர்நாத், கார்த்திகேயன் ஆகியோர், வெள்ளலுார் நிர்மல மாதா பள்ளி மாணவர்கள் சியாம் சரண், கோபிகிருஷ்ணா ஆகியோரை, 10-1 என்ற புள்ளி கணக்கிலும் வென்றனர்.
மலுமிச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆறு பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.