/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது
/
கோவில் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது
ADDED : மார் 14, 2025 11:05 PM
கோவில்பாளையம்; கோவில் பூட்டை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.
விளாங்குறிச்சியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரி கடந்த 3ம் தேதி இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். 4ம் தேதி காலை வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்து சவரன் நகை திருட்டுப் போயிருந்தது.
கோவில் நிர்வாகி துரைசாமி கொடுத்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
எஸ்.ஐ., இளவேந்தன் தலைமையிலான போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பிரபாகரன், 39, என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து நகைகளை மீட்டனர்.