/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.30 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்றவர் கைது
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.30 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்றவர் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.30 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்றவர் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.30 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்றவர் கைது
ADDED : ஆக 07, 2024 11:08 PM
கோவை,- போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.30 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்பனை செய்தவரை, மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மருதாயி,61. இவரது கணவர் ராஜூ கடந்த, 1989ம் ஆண்டு உப்பிலிபாளையத்தில், 3.021 சென்ட் இடத்தை வாங்கி சிமென்ட் ஷீட்டில் கட்டடம் அமைத்துள்ளார். ராஜூ நல்லாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமாரிடம், மருத்துவ செலவுக்காக இடத்தின் ஆவணங்களை கொடுத்து, ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
2023ம் ஆண்டு ராஜூ இறந்துவிட்டார். இந்நிலையில் சுரேஷ்குமார், டாக்டர் ராஜேஸ்வரியிடம் போலியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்று, போலி ஆவணங்கள் தயாரித்து துடியலுாரை சேர்ந்த பரணிதரனுக்கு, ரூ.30 லட்சம் மதிப்பிலான இடத்தை விற்பனை செய்துள்ளார்.
தகவல் தெரிந்து மருதாயி, மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மற்ற இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.