/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் ஊழியரை மிரட்டியவர் கைது
/
டாஸ்மாக் ஊழியரை மிரட்டியவர் கைது
ADDED : ஆக 07, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: போத்தனூர் அடுத்து செட்டிபாளையம் செல்லும் வழியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக, பணிபுரிபவர் புதுக்கோட்டையை சேர்ந்த ரகுபதி, 30. நேற்று முன்தினம் எருக்கம்பெனி பஸ் ஸ்டாப்பில் நின்று, போன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த இவருக்கு பழக்கமான போத்தனூர், எம்.ஜி.ஆர்., நகர், புது வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஹக்கீம் உசேன், 25, மது குடிக்க பணம் கேட்டார்.
இவர் தர மறுத்தபோது, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இவர் சத்தமிடவும், அப்பகுதியிலிருந்தோர் வந்து, முஹமது உசேனை பிடித்து போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.