/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் கேரளாவில் மீட்பு
/
9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் கேரளாவில் மீட்பு
9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் கேரளாவில் மீட்பு
9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் கேரளாவில் மீட்பு
ADDED : மே 01, 2024 12:16 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 55 வயது நபர் கேரளாவில் மீட்கப்பட்டார்.
மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்தவர் பத்ரன், 55. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து காணாமல் போய் உள்ளார். அதன் பின், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் வைத்து இவரை, அம்மாநில சமூக நலத்துறையினர் மீட்டு, அரசு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர் வசித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மேட்டுப்பாளையம் போக வேண்டும் என அங்குள்ள அதிகாரிகளிடம் பத்ரன் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு அவரது அப்பா அம்மாவின் பெயரான பழனிச்சாமி மற்றும் சரசம்மா பெயரை தவிர விலாசம் எதுவும் தெரியவில்லை.
இதையடுத்து கோழிக்கோடு சமூக நல அலுவலர் சிவன், கேரளா போலீசார் வாயிலாக மேட்டுப்பாளையம் போலீசாரிடம் இது தொடர்பாக விவரம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தாரை மேட்டுப்பாளையம் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், பத்ரன் குறித்த தகவல் தெரிந்தால் சமூக நல அலுவலர் சிவனின் 9061480601 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர் கொள்ளலாம் என கேரளா போலீசார் தெரிவித்தனர்.