/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்நிலை தொட்டி மீது ஏறி குதிக்க முயன்றவர் மீட்பு
/
மேல்நிலை தொட்டி மீது ஏறி குதிக்க முயன்றவர் மீட்பு
ADDED : பிப் 25, 2025 10:41 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி பக்கோதிபாளையத்தில், மேல்நிலை நீர் தொட்டி மீது ஏறி குதிக்க முயன்றவரை, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி பக்கோதிபாளையத்தில் நேற்று காலை, 60 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர் தொட்டி (20ஆயிரம் லிட்டர்) மீது ஏறி அமர்ந்த, அதே பகுதியை சேர்ந்த சதீஸ்,24, என்பவர் குதிக்க போவதாக கூறி வந்தார்.
இது குறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சிறப்பு நிலை அலுவலர் பாலாஜி தலைமையில், தீயணைப்பு வீரர்கள், அவரை சமாதானப்படுத்தி கயிறு கட்டி அவரை கீழே இறக்கினர்.
அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து வந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து, கோட்டூர் போலீசார் விசாரணை செய்ததில், அவர் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிந்தது. ஏற்கனவே, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தவர், அவருடைய அம்மாவுடன் வசதித்து வருவதும் தெரியவந்தது.

