/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
/
காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ADDED : ஆக 01, 2024 12:56 AM
பெ.நா.பாளையம் : சின்னதடாகத்தில் காரில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் எஸ்.ஐ., செல்வம் மற்றும் போலீசார் கோவை கணுவாய், சோமையம்பாளையம், சின்ன தடாகம் ஆகிய பகுதிகளில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தடுப்பு அலுவல் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது, சின்னதடாகத்தில் சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி, சோதனை செய்தனர். காரில், 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதை கடத்தி வந்த இடையர்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார், என்பவரை போலீசார் கைது செய்து, 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.