/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் மேலாண்மை குழு தேர்வு
/
மாநகராட்சி பள்ளியில் மேலாண்மை குழு தேர்வு
ADDED : ஆக 14, 2024 12:41 AM
கோவை;கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள, மாநகராட்சி துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். 24 பேர் மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் இருந்து தலைவர், செயலாளர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா கூறுகையில், ''மாணவர்களின் நலனுக்காகவும், பள்ளியில் வளர்ச்சிக்காகவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மேலாண்மை குழு தேர்வு செய்யப்படுகிறது. இந்த குழு மற்றும் நிர்வாகிகள், பள்ளியின் வளர்ச்சிக்காக நல்ல ஆலோசனைகளையும், பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளையும் செய்வார்கள்,'' என்றார்.

