/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினகிரி குமரக்கடவுள் கோவிலில் மண்டல பூஜை
/
ரத்தினகிரி குமரக்கடவுள் கோவிலில் மண்டல பூஜை
ADDED : மார் 14, 2025 11:09 PM
அன்னுார்; கரட்டுமேடு ரத்தினகிரி குமரக்கடவுள் கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கி உள்ளது. தினமும் காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 12 :00 மணி வரை, மண்டல பூஜை நடைபெறுகிறது. நேற்று குமரக்கடவுளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், நெய் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது.நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா குழுவினர் கூறுகையில், 'செவ்வாய் மற்றும் கிருத்திகை நாளன்று மட்டும் காலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். மற்ற நாட்களில் தினமும் காலை 10:00 முதல் 12:00 மணி வரை பூஜை நடைபெறும். பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெறலாம்,' என்றனர்.