/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீர் அகற்றுவதற்கு கட்டாயம் பதிவு அவசியம் :இல்லையேல் சிறை தண்டனை என எச்சரிக்கை
/
கழிவுநீர் அகற்றுவதற்கு கட்டாயம் பதிவு அவசியம் :இல்லையேல் சிறை தண்டனை என எச்சரிக்கை
கழிவுநீர் அகற்றுவதற்கு கட்டாயம் பதிவு அவசியம் :இல்லையேல் சிறை தண்டனை என எச்சரிக்கை
கழிவுநீர் அகற்றுவதற்கு கட்டாயம் பதிவு அவசியம் :இல்லையேல் சிறை தண்டனை என எச்சரிக்கை
ADDED : மே 08, 2024 12:37 AM
கோவை;கழிவுநீர் அகற்றுவதற்கு, 14420 என்ற 'டோல் பிரீ' எண்ணில் பதிவு செய்யாது பணிகள் மேற்கொண்டால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என, மாநகராட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் உள்ளிட்டவற்றில் 'செப்டிக் டேங்க்' கழிவுகளைஅகற்றும் கழிவுநீர் லாரிகள், உக்கடம், ஒண்டிப்புதுார், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் உள்ள கழிவுநீர் பண்ணைகளில் கொட்ட வேண்டும் என்பது விதிமுறை.
இதற்கென, மாநகராட்சி வசம் உரிமம் பெற வேண்டும். மேலும், செப்டிக் டேங்க், பாதாள சாக்கடை அடைப்பு, தீங்கு விளைவிக்கும் கழிவுகளை நவீன இயந்திரங்களை கொண்டு மட்டுமே அகற்ற வேண்டும். ஆனால், வீட்டு உரிமையாளர்கள், தொழிலாளர்களை வைத்து கழிவுநீரை சுத்தம் செய்வதால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.
இப்படி, தொழிலாளர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயமடைந்து நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.20 லட்சம், இதர பாதிப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இப்படி, வேலை வாங்கிய வீட்டு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விதிமீறலை தடுக்க '14420' என்ற 'டோல் பிரீ' எண்ணில் பதிவு செய்த பின்னரே கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
நேற்று ஆர்.எஸ்., புரம் மாநகராட்சி கலையரங்கில் தனியார் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள், பாதாள சாக்கடை பணியாளர்கள் என, 200க்கும் மேற்பட்டோருக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உச்ச நீதிமன்ற உத்தரவு, தண்டனை விபரங்கள் குறித்து விளக்கம் அளித்ததுடன்,எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ரூ.2 லட்சம் அபராதம்
மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில்,'வரும் காலங்களில், 14420 என்ற 'டோல் பிரீ' எண்ணில் கழிவுநீர் அகற்றுவதற்கு, கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர் அல்லதுவீட்டின் உரிமையாளர் ஆகியோரில்ஒருவர் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.பதிவு செய்யாது பணிகள் மேற்கொண்டால் ரூ.2 லட்சம் அபராதம், இரண்டு வருடம் சிறை தண்டனை பாயும்.கழிவுநீர் அகற்றும் லாரிகள் கழிவுநீர் பண்ணைகளில் அல்லாது திறந்த வெளியில் கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

