/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனேகரன் அறக்கட்டளை சார்பில் கல்விச்சுடர் ஆசான் விருது
/
மனேகரன் அறக்கட்டளை சார்பில் கல்விச்சுடர் ஆசான் விருது
மனேகரன் அறக்கட்டளை சார்பில் கல்விச்சுடர் ஆசான் விருது
மனேகரன் அறக்கட்டளை சார்பில் கல்விச்சுடர் ஆசான் விருது
ADDED : மே 16, 2024 04:30 AM
கோவை, : மனேகரன் அறக்கட்டளை சார்பில் நடந்த இலவச கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் கல்விச்சுடர் விருது வழங்கும் நிகழ்ச்சி பெரிநாயக்கன்பாளையத்தில் நடந்தது.
விழாவில் இ.பி.ஜி., அறக்கட்டளை தலைவர் பாலகுருசாமி, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் நிர்வாகி சாமி நாராயணானந்தா மகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதில், 2023 - 2024 கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வித்துறையில் சிறந்து விளங்கும் 25 ஆசிரியர்களுக்கு 'கல்விச்சுடர் ஆசான்' என்ற விருதும் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்கள், பெற்றோர் என பலர் பங்கேற்றனர்.