ADDED : ஆக 07, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் அரசு பழப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு மா, பலா, மங்குஸ்தான், ரம்பூட்டான், லிட்சி, வாட்டர் ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு அரிய பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
இந்த பழப்பண்ணையில், தற்போது மலேசியாவை தாயகமாக கொண்ட மங்குஸ்தான் பழ சீசன் துவங்கியுள்ளது. மொத்தம் 202 மரங்கள் உள்ளது. அதில் 80க்கும் மேற்பட்ட மரங்களில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்துள்ளன.
பண்ணையில் உள்ள ஊழியர்கள் அதனை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடை செய்து வரும் பழங்களை, அரசு பண்ணையிலேயே நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.