/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
மணி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 02, 2024 01:17 AM

கோவை;கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப்பள்ளியில், 1984ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு கூட்டம், பள்ளி அரங்கில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக சந்தித்ததால், ஒருவருக்கு ஒருவர் தங்களின் பழைய பள்ளி நாட்களின் மலரும் நினைவுகளை, பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் ரமேஷ் கூறுகையில், ''மணி மேல்நிலைப்பள்ளியில் 1984ம் ஆண்டு 10ம் வகுப்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் படித்தோம். இந்த 40 ஆண்டுகளில் நாங்கள் யாரும் ஒரு முறை கூட சந்திக்கவில்லை.
கோவையில் வசிக்கும் நண்பர்கள் சந்தித்து பேசி இருக்கிறோம். அனைவரும் சந்திப்பது இதுதான் முதல் முறை. இனி ஒவ்வொரு ஆண்டும் சந்திப்போம். இந்த சந்திப்பில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. இந்த நட்பு மேலும் தொடர வேண்டும்,'' என்றார்.