/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேன்சர் நோயாளிகளை ஊக்குவிக்க மராத்தான்
/
கேன்சர் நோயாளிகளை ஊக்குவிக்க மராத்தான்
ADDED : ஜூன் 26, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கேன்சர் நோயாளிகளை ஊக்குவிக்கும் வகையில், கொங்குநாடு மருத்துவமனை ஆன்லைன் மராத்தான் போட்டி நடத்தியது.
இதில், காலை 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, 15 ஆயிரம் அடிகள் நடந்து முடித்த முதல் 25 பேருக்கு, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
போட்டியில் முதல் மூன்று இடங்களில் முறையே, டாக்டர் ஸ்ரீ ஹரிஹரசுதன், தமேந்திரன், கிரப் சதீஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு, மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் ஆகியோர், பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.