/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
/
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
ADDED : மார் 12, 2025 11:16 PM

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடந்தது.
கருமத்தம்பட்டி மற்றும் புதூரில் உள்ள மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் பழமையானவை. கடந்த, 4 ம் தேதி பூச்சாட்டு திருவிழா துவங்கியது. இரவு, 7:00 மணிக்கு கம்பம் நடப்பட்டது. 5 ம் தேதி, அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர்.
கடந்த, 10 ம்தேதி சித்தி விநாயகருக்கு பொங்கல் பூஜை நடந்தது. நேற்று முன் தினம் சக்தி கரகம் அழைத்தல், அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மேள தாளத்துடன் மாவிளக்கு எடுத்து வரப்பட்டது.
பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சங்கமம் கலைக்குழுவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.