/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 23, 2024 11:04 PM
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழா, கடந்த, 9ம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சித்தம்மாள் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள், முளைப்பாலிகை எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்று மண் எடுத்தல், முதல் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நடந்தது. நிகழ்ச்சியில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, விமான கலசங்களுக்கு திருக்கூட நன்னீராட்டு செய்யப்பட்டது.
பின்னர் மூலமூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பூஜை நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.