/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் திருக்கல்யாண திருவிழா
/
மாரியம்மன் திருக்கல்யாண திருவிழா
ADDED : மே 30, 2024 05:00 AM

போத்தனூர் : கோணவாய்க்கால்பாளையத்திலுள்ள அன்னை மாரியம்மன் கோவில், திருக்கல்யாண திருவிழா முன்னிட்டு, சக்தி கரக ஊர்வலம் நடந்தது.
கோணவாய்க்கால்பாளையம், மசராயன் சந்தையிலுள்ள கோவிலில் விழா கடந்த, 21ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் முதல் நேற்று முன்தினம் வரை, தினமும் அக்னி கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றுதல், சிறப்பு அபிஷேக பூஜை, பூவோடு எடுத்து விளையாடுதல், சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தன.
நேற்று காலை பூவோடு, பால்குடம், தீர்த்த குடங்களுடன் அம்மன் ஆற்றிலிருந்து அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அன்னதானமும், மதியம் அக்னி அபிஷேகம், திருக்கல்யாணம், உச்சி பூஜை, மாலை மாவிளக்கு ஊர்வலமும் நடந்தன. திரளானோர் அம்மனை வழிபட்டு சென்றனர். நள்ளிரவு அக்னி கம்பம் எடுத்தல் நடந்தது.
இன்று முற்பகல், 11:00 மணிக்கு மசராயன், 11.30க்கு பட்டத்தரசியம்மன், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மதியம் அன்னதானமும், மாலை, 3:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், 5:00 மணிக்கு அம்மன் கரகம் திருவீதி உலாவும் நடக்கின்றன.
நாளை காலை, 7.00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு, 7:00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.