/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வெளிநாட்டு வாழ்வில் 'மிதக்க' மெரைன் படிப்பு'
/
'வெளிநாட்டு வாழ்வில் 'மிதக்க' மெரைன் படிப்பு'
ADDED : மார் 25, 2024 01:19 AM

கோவை;''மெரைன் படிப்பு படித்தால், கைநிறைய சம்பளத்தோடு வெளிநாடுகளுக்குப் பறக்கலாம்,'' என்று, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி கலை, அறிவியல் கல்லூரி மெரைன் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவர் சுரேஷ்குமார் பேசினார்.
வழிகாட்டி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
பிளஸ் 2 வகுப்பில் எந்தப் பிரிவில் படித்திருந்தாலும், மெரைன் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் சேர்ந்து படிக்கலாம்.
50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம். கப்பலில் வேலை என்பதால், மருத்துவச் சான்றிதழ் மிகவும் அவசியம். கலர் பிளைண்ட்னெஸ் குறைபாடு உள்ளவர்கள், இத்துறையில் சேர இயலாது.
பிற துறைகளைப் போல் அல்லாமல், 80 சதவீதம் முழுமையாக செய்முறை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டம் உடையது. சராசரிக்கும் குறைவான மாணவர்களும், எளிதாக தேர்ச்சி பெற்று நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும்.
கல்வி நிறுவனங்களில் கல்லூரி கட்டமைப்புகள், ஆய்வக வசதிகள், அனுபவமிக்க ஆசிரியர்கள் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இப்படிப்பை முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு பாஸ்போர்ட், எஸ்டிசிடபிள்யூ., சிடிசி., ஆகிய முக்கியச் சான்றிதழ்களை, பெற்று வழங்கும் கல்லூரிகளை, நேரடியாகப் பார்த்து விசாரித்து தேர்வு செய்யுங்கள்.
இப்படிப்பை படிக்கும் மாணவர்கள், கைநிறைய சம்பளத்துடன் பல வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

